13 11
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

Share

மாகாண சபைத் தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களைக் கோரவுள்ளதால் ஆரம்பத்தில் இருந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்குத் தேவையான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது. உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியும். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உண்டு என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.

தேர்தல் முறைமை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுடன் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சில் ஈடுபடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் உண்டு” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...