மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தைத் திருத்தும் வகையில் தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றில் இவ்வாறானதொரு சட்டமூலத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம்
இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்துள்ள சட்டமூலம் அங்கீகரிக்கப்படுமாயின் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.