வவுனியாவில் ரணிலை காண முற்பட்டவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்

tamilnih 26

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் அவரை காண்பதற்காக முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05.01.2024) நடைபெற்று வருகிறது.

இதன்போது காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் ஜனாதிபதியை காண்பதற்காக உள்நுழைய முற்பட்டுள்ளனர்.

இதனை அங்கிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் அவர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேலும் அங்கிருந்த காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு துணியை காட்டியவாறு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version