6 50
இலங்கைசெய்திகள்

யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் – நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்

Share

யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் – நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்

யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது இன்று (17) சாவகச்சேரி நகரசபை முன்னால் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.

கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர்.

இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இத்தருணத்தில் நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார்.

இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...