ஆசிரியர் சங்கங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கம் ஆசிரியர் சங்கங்களுக்கான தீர்வை முன்வைக்காத நிலையில் தற்போதைய அரசாங்கம் 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் நாட்டில் நிலவும் பொருளாதார சூழலை கருத்திற் கொள்ளாது ஆசிரியர் சங்கங்கள் பாரிய போராட்டம் முன்னெடுக்க போவதாக கூறுவது மக்களையும், மாணவர்களையும் துன்புறுத்தும் செயல் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews