விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதி! சிங்களவர்களுக்கு சொல்லப்படும் பொய்கள்

tamilni 333

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதி! சிங்களவர்களுக்கு சொல்லப்படும் பொய்கள்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, “பிரபாகரனிடம் உங்களுக்கு நாங்கள் ஒரு சுயாட்சியை உருவாக்கித் தருவோம்” என்று உத்தரவாதம் வழங்கினார்.

எனினும் அந்த உத்தரவாதம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (20.07.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டின் வீழ்ச்சிக்கு சிங்கள தமிழ் இனங்களுக்கு இடையிலான முரண்பாடே காரணம்.

தமிழர்கள் உரிமை கேட்கின்ற போது சிங்கள மக்களின் இருப்பு இல்லாமல் போய்விடும் என்று சிங்கள மக்களுக்கு அப்பட்டமான பொய்களை இந்த சிங்கள அரசியல் தலைவர்கள் சொல்லி சொல்லியே முறைகேடான ஆட்சியை கொண்டு நடத்துவதில் பழக்கப்பட்டு விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version