திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment