தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் நடமாடத் தடையா?

saventhira

கொரோனாத் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என எந்தக் கட்டுப்பாடும் வெளியிடவில்லை.

இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாடு மீளவும் திறக்கப்படவுள்ளது.

இதற்கென சுகாதார வழிகாட்டல் அடங்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கொவிட் தடுப்பூசியை பெறாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது என்று எந்தக் கட்டுப்பாடும் வெளியிடப்படவில்லை.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை குறித்து வைத்து குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மக்களுக்கு தேவையான வழிமுறைகளை தயாரிக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version