220518 mullivaikkal 14 scaled
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழரின் போராட்டத்தை நினைவுகூர்ந்த தமிழரசுக் கட்சியின் மே தின பிரகடனம்

Share

ஈழத்தமிழரின் போராட்டத்தை நினைவுகூர்ந்த தமிழரசுக் கட்சியின் மே தின பிரகடனம்

உலகத் தொழிற்சமூகங்களோடு இணைந்து ஈழத்தமிழர்களும் தங்களின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எல்லாவகை அடிமைத்தனங்களிலிருந்தும் விடுபடப் போராடியவாறு உலகத் தொழிலாளர் நாள் நிகழ்வில் பங்குகொள்வது நிறைவைத் தருகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியானது(TNA), 2024 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மே நாளுக்கான பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது,

‘“இரத்தம் தோய்ந்த செங்கொடிகளை உயர்த்தியவாறு, உழைத்து உயர்வுபெற்ற உழைப்பாளிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்து மேன்மை கொள்ளும் நாளே மே நாள்.

இரத்தத்தினால் தோய்ந்த செங்கொடிகள், அவை வென்றுதந்த போராட்டங்களின் சுதந்திரத்தின் மாண்பையும் அதன் கண்ணியத்தையும் மனிதகுல வரலாற்றில் இடையறாது பதிவுசெய்துள்ளது என்பதை பெருமையோடு நினைவு கொள்ளும் நாளே இந்த மே நாள்.

பூமிப்பந்தில் வாழுகின்ற உழைப்பாளர்களின் செம்மையும், செழுமையும், சீர்நிறைந்த வாழ்வியலும் வையகத்தில் முந்தியிருக்கச் செய்யும் வகையில் முழுமை தந்த நாளாக, வேதனைகள் மத்தியிலும் மகிழ்ந்து நிறைவுபெறும் நாளாக மே நாள் வரலாற்றில் வடிவமெடுத்து வருகின்றது என்பதை பெருமையுடன் நினைவு கொள்வோம்.” என்றுள்ளது.

மேலும் பிரகடன அறிக்கையில்,

அரசின் பொறுப்பற்ற தான்தோன்றித் தனமான செயல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளான சகலருக்குமான நீதி கிடைக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பில் இடம்பெற்ற மே தினப் பிரகடன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு என்னும் தமிளுரில், நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினால், மே தினத் தொழிலாளர் எழுச்சிக்கான நிகழ்வு நடைபெறுகின்றது.

இதன்போது கட்சியின் மே தினப்பிரகடனத்தை அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பின் தலைவி திருமதி றஞ்சினி கனகராசா வாசித்தார்.

இதன்போது அதில் தெரிவிக்கப்பட்டதாவது,

மயிலத்தமாடு, மாதவனை கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் தரையானது, அயல் மாவட்ட ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கால்நடை வளர்ப்பும் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், மீனவத் தொழில், மலையகத் தோட்டத் தொழில், கூலித் தொழில், அரச தொழில்கள் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நிறைவளம் மிக்க நமது நாட்டில் குறைவயிற்றோடு தொழிலாளர்கள் மற்றும் அதிக மக்கள் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 75 ஆண்டுகள் காலமாக இந்த நாட்டினை ஆட்சி செய்த அதிகார வர்க்கமும், அதற்குச் சார்பாகச் செயற்பட்ட அதன் உறவாளர்களும் காரணர்களாக இருந்தனர்.

அதனை அவர்களே பொறுப் பேற்கவேண்டும். இதனை விடவும் காணாமல் ஆக்கப்பட உறவுகளின் ஏக்கம், கண்ணீர், வாழ்வாதாரம் என்பவற்றுக்கும் இன்றைய ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை.

வழங்கவில்லை, அரசியல்கைதிகள், முன்னாள் போராளிகள், மாற்றுதிறனாளிகள், விதவைகள், ஏதிலிகள் ஆகியோருக்கான விடுதலை பரிகாரங்கள் அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, அரசின் பொறுப்பற்ற தான்தோன்றித் தனமான செயல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளான சகலருக்குமான நீதி, நிவாரணம், பரிகாரம் அனைத்தும் அரசினால் மேற்கொள்ளபபட வேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட 2024 இற்கான மேதினப் பிரகடனமானது ஜனாதிபதியையும் அரசாங்கத்துறையும் வலியுறுத்திக் கையளிக்கின்றது.

இவை அனைத்திற்குமான தீர்வு என்பது, தமிழர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தன்னாட்சிசார்ந்த கூட்டாட்சிமுறைதான் என்பதையும் எமது மேதினப்பிரகடனம் ஸ்ரீலங்கா அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மீண்டுமொருமுறை வலியுறுத்துகின்றது. என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...