3 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

Share

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் மாணர்வகளை கடவுச்சீட்டு பெற அனுப்புவதால், அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் காரணமாக குறித்த மாணவர்கள், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவ்வாறன சூழ்நிலைகளில் திணைக்கள அதிகாரிகள் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...