பன்றி இறைச்சி உட்கொண்ட இரண்டு கைதிகள் உயிரிழப்பு

24 663ae3db3b3d7

பன்றி இறைச்சி உட்கொண்ட இரண்டு கைதிகள் உயிரிழப்பு

பன்றி இறைச்சி உட்கொண்ட இரண்டு சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியை கைதியொருவரும் மேலும் 15 கைதிகளும் உட்கொண்டுள்ளனர்.

இவ்வாறு உட்கொண்டவர்களில் மூன்று கைதிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியின் வீட்டிலிருந்து இந்த உணவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பன்றி இறைச்சியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த உணவை உட்கொண்ட மேலும் 13 பேருக்கு எவ்வித நோய் நிலைமைகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version