பொடிலெசி என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவர் ஜனித் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பான வழக்கு கொழும்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிபதியிடம் தெரிவித்தது.
இதனையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
#SrilankaNews