இணையத்தில் வைரலாகும் பிரதமரின் புகைப்படம்

minister 087d5b18da556ef2e3cfac59d3f0a5d2

சமகால அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் கண்காணித்து வருகின்றனர்.

அதற்கமைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

பிரதமர் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்யும் புகைப்படம் ஒன்று அண்மையில் யாரோ ஒருவரால் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதற்காக அவர் ஒரு பாதுகாவலரை அழைத்து செல்வதனை அவதானிக்க முடிந்துள்ளது. அத்துடன் தனக்கு தேவையான பொருட்களை தானே தேடி கொள்வனவு செய்துள்ளார்.

இதனை சுப்பர் மார்க்கெட் சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆட்சிக்கு புதிதாக வந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி, மக்களின் அபிமானத்தை பெற்றுக்கொள்ள இவ்வாறு எளிமையாக செயற்படுவதாக வெளிக்காட்டுவதாகவும் சில தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version