பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும்! அக்மீமன தயாரத்ன தேரர் போர்க்கொடி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்மீமன தயாரத்ன தேரர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
நாட்டை நெருக்கடியில் தள்ளுவதற்கும், அந்நிய நாடுகளுக்கு அடிமைப்படுத்துவதற்காகவும் பணம் பெற்றுக் கொண்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட USAID பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பட்டியலில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரும் இருப்பதாக அவர் கூறுகிறார்.
யூஎஸ்எயிட் நிதி விவகாரம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை தனது நிலைப்பாட்டை விளக்கும்வகையில் எதுவித அறிக்கையொன்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.