IMG 20220218 WA0030
இலங்கைசெய்திகள்

பூசாரி வீட்டு திருடன் சிக்கினான்!!

Share

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் திருட்டு நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

திருட்டுச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் பிற்பகலில் இடம்பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உள்ள தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வேலணையைச் சேர்ந்த 24 வயதுடைய முதன்மைச் சந்தேக நபர் கஸ்தூரியார் வீதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

முதன்மைச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வேலணையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மைச் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1768301444 WIMAL 6
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்சவின் போராட்டம் வெற்றி: தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு!

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக...

images 7 3
உலகம்செய்திகள்

ஈரானில் இரத்தக்களரியாகும் போராட்டங்கள்: 2,000 பேர் உயிரிழப்பு; முதல்முறையாக ஒப்புக்கொண்டது அரசு!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில், உயிரிழந்தவர்களின்...

Parliament rejects misuse claims against Speaker Jagath Wickramaratne
செய்திகள்அரசியல்இலங்கை

ஊழியர்கள் போதைப்பொருள் பாவிப்பதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய்: சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கடும் மறுப்பு!

பாராளுமன்ற வளாகத்திற்குள் ஊழியர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானம் பயன்படுத்துவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் எவ்வித...

images 6 3
செய்திகள்இலங்கை

டித்வா புயல் நிவாரணம்: மியன்மாரிலிருந்து இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை!

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டித்வா’ (Didwa) புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 500 மெட்ரிக்...