நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம்

rtjy 53

நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும், நீரைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்காக விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version