மலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது பல பொருட்களின் விலை குறைந்துள்ளதால் பிஸ்கட் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதால், முக்கிய பிஸ்கட் நிறுவனங்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, பிஸ்கட் வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தன. அவ்வாறு செய்யாவிட்டால் தங்களது நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
#SriLankaNews