மதுபானம் விலை அதிகரிப்பு
மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது.
இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 சதவீதம் வரி உயர்வின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மதுபான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியால் ஏற்படும் நஷ்டத்தை சீர்செய்யும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a comment