இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் ஒப்பமிட்ட ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பில் , மற்றுமொரு தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணியளவில் யாழ். நகரிலுள்ள யு.எஸ். விடுதியில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
#SrilankaNews
Leave a comment