26 4
இலங்கைசெய்திகள்

அரிசி விற்பனை : ஜனாதிபதியின் அதிரடி முடிவு : விலையும் நிர்ணயம்

Share

அரிசி விற்பனை : ஜனாதிபதியின் அதிரடி முடிவு : விலையும் நிர்ணயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க இன்று(07) அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு அவர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எமது நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு அதிகூடிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளில் அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கே அதிகளவான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எனவே அரிசிக்கான மக்களின் உரிமையில் கை வைக்க வேண்டாம் என அரிசி ஆலை உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி, அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகும். சில்லறை விலை 230 ரூபா.

ஒரு கிலோ வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபா.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகும்.

ஒரு கிலோ சம்பாவின் மொத்த விலை 235 ரூபாவாகும். சில்லறை விலை 240 ரூபா.

ஒரு கிலோ கீரி சம்பா மொத்த விற்பனை விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...