சங்கநாயக்க தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி

22 6353f830c7aaf

மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் பூதவுடலுக்கு இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாளித்த ரங்கே பண்டார உள்ளிட்ட பலரும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதுடன் மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் தேகத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

#Srilankanews

Exit mobile version