அதிபர் தேர்தலை தவிர எந்த தேர்தலும் நடைபெறாது

24 6639e4d66d07b

அதிபர் தேர்தலை தவிர எந்த தேர்தலும் நடைபெறாது

அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்தை நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே ஆளும் கட்சி பிரதம அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version