5 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், தமது கொள்கையை அறிவிப்பதற்காக சங்க மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அரசியல் செல்வாக்கு இல்லாத குறைந்தது 5,000 பௌத்த பிக்குகள் பங்கேற்கும் சங்க மாநாடு எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.

“சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க (AKD) ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்கள் கொள்கைகளை மகா சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும்.

பொதுமக்களை இலக்காகக் கொண்டு, நிலைமை மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் இந்த தலைவர்கள் அடிக்கடி பல்வேறு கொள்கைகளை அறிவிக்கின்றனர்.

எனவே, பிரதான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்து, பொதுக் கொள்கையொன்றை பிரகடனப்படுத்தி, புதிய ஜனாதிபதி தொடர்பில், மக்கள் அறிவார்ந்த தீர்மானத்தை எடுக்க பொதுபலசேனா உதவவுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...