tamilni 307 scaled
இலங்கைசெய்திகள்

டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

Share

டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகையில் ஜனாதிபதித் ​தேர்தலின் போது ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர் ஒருவர் பத்து ​கோடி வரை பேரம் பேசியுள்ளாதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை இப்போதிருந்தே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு ஆதரவைத் தரும் பட்சத்தில் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை வழங்குவதாகவும் வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளுமாறு அவரிடம் ​வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிலும் ஒரு வேட்பாளர் தனக்கு ஆதரவளிப்பதற்காக டயனா கமகேவிடம் 10 கோடி ரூபாய் வரை அன்பளிப்பாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் வாக்களித்துள்ளார்.

எனினும் குறித்த வேட்பாளரின் கோரிக்கையை டயனா கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...