ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

23 4

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று (08) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் ( 09) முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version