மூன்று மணிநேரம் ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு!

tna 2

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு பிற்பகல் 1.30 மணி வரை நீடித்தது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜா, நாடாமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தாத்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ,த. கலையரசன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version