tamilni 239 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி

Share

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும்.

வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது.

தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அறுவடையின் செழுமைக்கு வித்திட்ட இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறுவதே பண்டிகையின் நோக்கமாகும்.

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம். விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.

அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

அதேபோல் தைப்பொங்கல் நமக்கு சகவாழ்வையும் மதிப்பையும் போதிக்கிறது. அதற்கமைய நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு ஒருதாய் மக்களாக முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...