குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!!
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!!

Share

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!!

குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றும் இந்தச் செயலை தடுத்து நிறுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பியிடம் உறுதியளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை குருந்தூர்மலையில் தமிழரின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டது, அங்கு பொங்கலிட்டு வழிபட குருந்தூர்மலை விகாரை பிக்குவும் கும்பல் ஒன்றும் தடை ஏற்படுத்தியது.

நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்த இவர்களின் செயலுக்குப் பொலிஸார் துணை நின்றிருந்தனர்.

பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழேயே இது முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சித்தார்த்தன் நேற்று (18.07.2023) ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதன்போதே இந்த விடயம் குறித்து முறைப்பாட்டை முழுமையாக தருமாறும், அந்தப் பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...