24 6641616f1ab6b
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

Share

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனை கொழும்பின் ஊடகம் ஒன்று தமது சிறப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தனது பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் இலக்கத்தை அவர் கேட்டதாகவும் புத்தளம் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

பிரதேசத்தில் வசிக்கும் குறிப்பிட்ட பொதுமகன் ஒருவரின் காணியை, அரசு கையகப்படுத்தியமைக்காக அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அண்மையில் வழங்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்டவர், நட்டஈடு வழங்குவதற்கு எதிராக மனுவொன்று தமக்கு கிடைத்துள்ளதாகவும், எனவே விசாரணை முடியும் வரை நட்ட ஈட்டை நிறுத்தி வைக்குமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரதேச செயலாளர் நட்டஈடு பெற்றுக்கொண்டவரை அழைத்து, விசாரணை நடத்தியபோது, அவர், ஜனாதிபதி செயலக ஊடகப்பணிப்பாளர் என்று கூறிக்கொள்பவர், தம்மிடம் இழப்பீட்டு தொகையை குறைக்குமாறு வலியுறுத்துவதாக பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரதேச செயலாளர்களை இலஞ்சம் கேட்கும் கைப்பாவைகளாக பாவிக்கும் நிலைக்கு ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர் என்று பிரதேச செயலாளர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் வெளியானதை அடுத்தே இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊடகப் பணிப்பாளர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...