திறந்து வைக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் அரசியல் அலுவலகம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
கொழும்பு (Colombo) – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று (06) காலை திறந்து வைத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிபர் தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.