imf
இலங்கைசெய்திகள்

துல்லியமான தரவுகளைப் பெற விசேட பொறிமுறையை உருவாக்க ஜனாதிபதி பணிப்புரை!

Share

சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான துல்லியமான தரவுகளைத் திறம்படப் பெறுவதற்காக, ஒரு விசேட பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

இன்று (டிசம்பர் 4) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, ஜனாதிபதி, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பின்போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இதுபோன்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி மண்சரிவுகளினால் 1289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 44,574 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷான், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அரவிந்த சிறிநாத ஆகியோர் உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...