ஜனாதிபதியை விமர்சித்த ஜி.எல்.பீரிஸ்

tamilni 68

ஜனாதிபதியை விமர்சித்த ஜி.எல்.பீரிஸ்

உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் சபைக்கு முக்கிய பங்கு இருந்தாலும் அது தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே சுயாதீன ஆணைக்குழுக்களாக காணப்படுகின்றன.

ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சபைக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version