ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து தம்மிக்க பெரேரா அறிவிப்பு

rtjy 145

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து தம்மிக்க பெரேரா அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 51 சதவீதம் பெரும்பான்மையை பெற முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.​​

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தம்மிக்க பெரேராவால் தொடங்கப்பட்ட கல்வி முயற்சியின் கீழ் பல மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையில் மொத்தமுள்ள 5.5 மில்லியன் குடும்பங்களில் 1.1 மில்லியன் குடும்பங்களை சேர்ந்த 1.5 மில்லியன் மாணவர்கள் குறித்த கல்வி முயற்சியின் கீழ் பயன் பெற்றுள்ளனர்.

 

Exit mobile version