சஜித்தின் சகாக்கள் பலரும் ரணிலின் மேடையில் ஏறுவர் : மொட்டு எம்.பி. மகிந்தானந்த

24 66a62c6100727

சஜித்தின் சகாக்கள் பலரும் ரணிலின் மேடையில் ஏறுவர் : மொட்டு எம்.பி. மகிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்து வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணையவுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார், அவர் ஓடிவிடுவார் எனச் சிலர் பிரசாரம் செய்தனர். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் வேட்பாளராகவே இந்த மேடையில் அமர்ந்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அவர் பின்னால்தான் அனைத்து கட்சிகளும் இன்றுள்ளன.

நெருக்கடியான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்காத சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) வெற்றி வேட்பாளரா? இல்லை. நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் எமது மேடையிலேயே இருக்கின்றார். அடுத்துவரும் நாட்களில் சஜித்தின் சகாக்களும் எமது மேடையில் ஏறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version