5 38
இலங்கைசெய்திகள்

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – நாமல் மீது தாக்குதல் முயற்சி – மோதலை தவிர்த்த ஷிரந்தி

Share

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – நாமல் மீது தாக்குதல் முயற்சி – மோதலை தவிர்த்த ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்த லொஹான் ரத்வத்தவுடனான வாக்குவாதம், அடிதடி வரை சென்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்தவர்களின் தலையீட்டினால் மோதல் தடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முறுகல் நிலை அடிதடி வரை சென்ற நிலையில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தலையிட்டு சண்டையை தடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு, ஒரு கட்சியாக ஆதரவளிக்க வேண்டும் என லொஹான் ரத்வத்த இதன்போது வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதன்போது கட்சி என்ற ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டிய போதே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...