வெளிநாட்டு நிவாரணங்களை ஒருங்கிணைக்க தேசிய குழு நியமனம்: தலைவர் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர!

Untitled 106

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிவாரணங்கள் மற்றும் உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்கும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய குழு ஒன்றை நியமித்துள்ளதாகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று (டிசம்பர் 8) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும்.

இந்தக் குழுவின் தலைவராகப் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் செயற்பாடுகள் நேற்று முதல் (டிசம்பர் 8, 2025) நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version