ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.
எவ்வித காரணங்களும் கூறாமல் ஜனாதிபதி வெளியிட்ட பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜனாதிபதியின் பதிவில் “சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம்.” என பதிவிடப்பட்டுள்ளது.
மறைமுகமாக ஜனாதிபதி கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ளதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக சமகால அரசாங்கத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் பிரதமர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.