கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி இரவு தெரணியகல, லிஹினியகல பகுதியில் வீட்டில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
இரவு 11.00 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரே இந்த துயர சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து தாயின் வயிற்றில் விழுந்துள்ளது.
வேதனை மிகுதியால் துடித்த தயா் உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தாய் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.