இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share
14 29
Share

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளமானது வலய கல்வி அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான 6ஆயிரம் ரூபாவாக மட்டுமே காணப்படுகின்றது.

2013 வடக்கு மாகாண சபை அமைந்த பின் அப்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த பா.கஜதீபன், போன்றோரின் முயற்சியாலும் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜாவின் ஒப்புதலாலுமே அது கூட சாத்தியப்பட்டது.

அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர் ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிரந்தர சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதனை வடக்குமாகாண சபையின் கீழ் எடுக்க நடவடிக்கைக்கும் எடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. இன்றும் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இது நடைமுறையிலுள்ளது.

அதே நேரம் 2018 இன் பின்னர் வடக்குமாகாண சபை பதவி நிறைவிற்கு பின் வடக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் நிரந்தர நியமனமுள்ள போட்டி பரீட்சை மூலம் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற விதிகளுக்கு உட்பட கூடிய முன்பள்ளி ஆசிரியர்களும் 30,000ரூபாக்கு உட்பட்ட சம்பளத்துடன் வடக்குமாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போதும் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் வெறும் 6000உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக பெறுகின்ற இடரான பொருளாதார நிலையிலேயே கடமையாற்றி வருகின்றனர். இது மிகவும் பாதிப்பான நிலையாகும் என்பதோடு முன்பள்ளி ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பலத்த எதிர்பார்ப்புக்களோடு வடக்கு மாகாண தமிழ்மக்கள் வாக்களித்து 05ஆசனங்களை வழங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி தற்போதைய பிரதமரே கல்வி அமைச்சராகவும் உள்ள காரணத்தினால் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகள் உட்பட அனைத்து விதமான முன்பள்ளிகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பள்ளிகளாக உள்வாங்கிட நடவடிக்கை எடுத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும், சம்பள அதிகரிப்பினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...