ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு உயர் பதவி

24 6621d8d72b0eb

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு உயர் பதவி

ஐக்கிய நாடுகளின் (united nation) மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

அத்துடன் அவர் உலக வங்கியுடன் (World Bank) இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார்.

இலங்கையின் பொருளாதார நிபுணர் குருகுலசூரிய அமெரிக்காவின் (United state of america) யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஐக்கிய நாடுகளின் (UN) மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன், கலாநிதி குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின் (UN) மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

அங்கு அவர் 140 நாடுகளில் இயற்கை, காலநிலை மற்றும் எரிசக்தி நிதியை மேற்பார்வையிட்டார்.

Exit mobile version