3 மணித்தியால மின்வெட்டு குறித்து வெளியான தகவல்
இலங்கைசெய்திகள்

3 மணித்தியால மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

Share

3 மணித்தியால மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல வாவியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டால் தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு பத்து நாட்களுக்குத் தேவையான நீரை பெற்றுக் கொள்வது தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறு நீர் திறந்துவிடப்படுமாக இருந்தால் தற்போதுள்ள நீர் மட்டம் மேலும் குறைவடைவதன் காரணமாக தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் 3 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் சமனல வாவி மற்றும் உடவலவ நீர்த்தேக்கம் என்பவற்றில் போதிய நீர் கொள்ளளவு இன்மையால் அடுத்து வரும் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் மின்சார உற்பத்தி பாதிக்கப்படலாம் எனவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த வாரத்தில் மட்டும் மொத்தமாக 30 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் இந்த நீர்த்தேக்கமானது எதிர்பார்க்கப்பட்டதில் 50% நீர் கொள்ளளவை மாத்திரமே பெற்றிருந்ததாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...