இலங்கைசெய்திகள்

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் : பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

Share
17 15
Share

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் : பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதன் பின்னரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் பாதுகாப்புக்காக 54,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...