இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மின் விநியோக தடை!

Share
5 17
Share

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மின் விநியோக தடை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக, சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், இவ்வாறு சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று காலை முதல் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் நேற்று மாலை 5.30 அளவில் சுமார் 6 மணிநேரத்தின் பின்னர் முழுமையாக வழமைக்குத் திரும்பியிருந்தது.

எனினும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், நேற்றைய தினம் உப மின்நிலையத்தில் குரங்குகள் எவையும் மோதவில்லை என பாணந்துறை உப மின் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே, கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை வழங்க இயலாமையால் மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையின்மை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பல பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடையினால் தொழிற்சாலைகள், முதலீட்டு வலயங்கள் மற்றும் பிற வணிக நிலையங்களின் செயற்பாடுகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

மின்சார விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகள் செயலிழந்ததால் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...