18 3
இலங்கைசெய்திகள்

அநுர அரசிலும் தொடரும் அதிகார துஷ்பிரயோகம் – கட்சியால் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக்காலத்திலும் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் விவாதித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகள் குழு மீது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மே தின பேரணிகளில் பங்கேற்ற மக்களை ஏற்றிச் சென்ற சுமார் 20 பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் குருந்துகஹஹெதப்ம பகுதியில் நிறுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத மஹிந்தசிறி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் பேருந்துகளை நிறுத்த அனுமதித்த பல பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் பயணித்த மக்களின் செயற்பாடு கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளை நிறுத்தி, உணவருந்தியதுடன், மது அருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இந்த முறையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை எனவும் இந்த நடைமுறையை நிறுத்தத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸதார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...

images 5 2
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 24 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய...

25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடையில் நவம்பர் 21 பேரணி: அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டவே இந்த ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த...