மகிந்தவின் இல்லத்தில் கூடிய ராஜபக்சக்கள்

tamilni 380

மகிந்தவின் இல்லத்தில் கூடிய ராஜபக்சக்கள்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்குவதற்கு பசில் ராஜபக்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட மாநாடு மற்றும் நிறைவேற்று சபையில் நாமல் ராஜபக்ச அந்த பதவிக்கு முன்மொழியப்படவிருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக அந்த பிரேரணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லவுள்ள நிலையில், கட்சியின் நிறைவேற்று சபை நீண்ட நாட்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடியுள்ளது.

இதன்போது கட்சியின் ஒரு சில பதவிகளுக்கு மாத்திரம் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version