அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று மாலை பணிக்குத் திரும்பிய குறித்த கான்ஸ்டபிள், தனது கடமைக்கான (Service) துப்பாக்கியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது தற்செயலாக அது இயங்கியுள்ளது.
இதன்போது பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் அவரது ஒரு காலில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த கான்ஸ்டபிள் உடனடியாக பொலிஸ் வாகனம் மூலம் பலப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காயங்கள் பாரதூரமானவை அல்ல என்றும், தற்போது அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.