image b59796772b
அரசியல்இலங்கைசெய்திகள்

கஜேந்திரகுமார் வடக்கு, தெற்கை இணைக்க முடியாதவர் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

Share

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினருமே ஈடுபடுவதாகக் கஜேந்திரகுமார் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், “வடக்கிலேயே அதிகளவானோர் கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்டு இதுபற்றிக் கூறுகின்றனர். போதைப்பொருளை ஒழிக்க இராணுவத்தினரும் காவல்துறையினருமே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்,” என்று பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதையும் அவர் நினைவுபடுத்தினார்.

அரசியல் செய்வதாகக் குற்றச்சாட்டு: “வடக்கைப் போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்,” என பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...