ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது.
புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்புதல், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
மாவட்ட மட்டத்திலான கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அடுத்தக்கட்டமாக இந்த நகர்வில் இறங்கவுள்ளது.
இன்று நடைபெறும் அக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்திலும் இது பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது.
#SrilankaNEws
Leave a comment