இலங்கைசெய்திகள்

மீண்டெழுந்து வருகின்றது ஐ.தே.கவும் பெரமுனவும்! ராஜித

Share
24
Share

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மீண்டெழுந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது”அரசை நிர்வகிக்க முடியாவிட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு நன்றாக அரசியல் செய்யத் தெரியும். இவர்களால் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது என்பது மக்களுக்குத் தெரியும்.

வீழ்ந்த கட்டத்திலும் பார்க்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த நிலையில் உள்ளது. ரணிலால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் எனக் கிராம பகுதி மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர்.

ரணிலின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகின்றது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுகின்றமையும் விசேட அம்சமாகும்.

எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த பெறுபேறு கிட்டும் என நம்புகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் வரவேற்பு உள்ளது.

ஏனெனில் மொட்டுக் கட்சி வாக்குகளே தேசிய மக்கள் சக்தியை ச் சென்றடைந்தது. அந்த வாக்கு தற்போது மொட்டுக் கட்சி பக்கம் திரும்பி வருகின்றது.”என கூறியுள்ளார்.

Share
Related Articles
23 1
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம்..! அநுர உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அந்தச் சட்டத்தை நிச்சயம்...

25
இலங்கைசெய்திகள்

உலகப்புகழ்பெற்ற ஒன்பது தூண் தொடருந்து பாலத்தில் நீர்க்கசிவு

இலங்கையின் உலகப்புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான எல்ல, நைன் ஆர்ச் (ஒன்பது தூண்) தொடருந்து பாலத்தில் நீர்க்கசிவு...

21 2
இலங்கைசெய்திகள்

வியட்நாம் சென்றுள்ள ஜனாதிபதி : நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), வியட்நாமுக்கு (Vietnam) விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04...

22 1
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள்: பெப்ரல் நடவடிக்கை

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்களை பெப்ரல்...