5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானம்

tamilnaadi 57

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானம்

5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version